சமீபத்தில் வெளியான ‘சந்தோஷத்தில் கலவரம் படத்தில் வித்தியாசமான நாயகன் பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளவர் நடிகர் நிரந்த். இவர் ஏற்கெனவே கன்னடத்தில் ‘லைப் பூ சூப்பர் ‘என்கிற கன்னட படத்தில் அறிமுகமானவர். இயக்குநர் கனவுடன் சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவரின் நடை உடை பாவனைகள் பிடித்துப் போய் தயாரிப்பாளர் திம்மா ரெட்டி இவரை நடிகராக்கி விட்டார்.
அந்தப் படம் தான்’ லைப் பூ சூப்பர் ‘. அப்படத்தில நிரந்தின் நடிப்பைப் பார்த்த அதே திம்மா ரெட்டி ,தான் தமிழில் படம் தயாரிக்க முடிவு செய்த போது இவரையே முக்கிய நாயகன் பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார் .
தமிழில் நாயகனாக அறிமுகமாவது பற்றி நிரந்த் கூறும்போது , “தமிழ்ச்சினிமா ரசிகர்கள் தோற்றத்தை விட திறமையை வரவேற்பவர்கள் ; ஆராதிப்பவர்கள் .அந்த நம்பிக்கையில்தான் நான் தமிழில் நடிக்க சந்தோஷமாக சம்மதித்தேன். திறமைக்கு மரியாதை தரும் தமிழில் தடம் பதிக்க எனக்கு ஆசை.
பெங்களூரை சேர்ந்த இவர் இயக்குநர் ஆக வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தாராம். நல்லவனோ கெட்டவனோ கவலையில்லை கதாபாத்திரம் மட்டுமே தனக்கு முக்கியம் என்கிறார். இரண்டாவது படமாக நிரந்த் நடித்த கன்னடப் படம் ‘கார்ணி ‘வெளியாகி விட்டது. நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.