கடந்த 2013 பிப்ரவரியில் வெளியான ‘ஆதிபகவன்’ படத்திற்கு பிறகு ‘ஜெயம்’ ரவி நடித்துள்ள படம் தான் ‘நிமிர்ந்து நில்’. ‘போராளி’ படத்திற்கு பிறகு சமுத்திரக்கனி இயக்கும் இந்தப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக அமலா பால், மேக்னா ராஜ் இருவரும் நடிக்கிறார்கள். ‘இந்தப்படம் வரும் 7ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இதற்கான டிக்கெட் புக்கிங் இன்றுமுதல் ஆரம்பிக்கிறது.
‘ஆதிபகவன்’ படத்தை தொடர்ந்து இந்தப்படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் ஜெயம் ரவி. குறிப்பாக 48 வயதான நரசிம்ம ரெட்டியாக நடித்திருக்கும் இவரது கதாபாத்திரம் மிரட்டலாக இருக்குமாம். அதுமட்டுமின்றி சரத்குமார், விஜய் டிவி கோபிநாத் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படத்தை வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் தெலுங்குப்பதிப்பான ‘ஜண்டாபாய் கபிராஜூ’வில் நானி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
517733 280770I conceive this internet internet site contains some rattling amazing information for everyone : D. 720283