மலையாள நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே காண்டம், பீர் எல்லாம் வாங்கி, அதைவைத்து ரவுடிக்கும்பல் மீது அட்டாக் பண்ணி இளைஞர்களை அதிரவைத்தார். புல்லட் ஒட்டி புல்லரிக்க வைத்தார்.. அதனாலேயே என்னவோ, இவ்வளவு வீரதீர மங்கையான நிக்கிக்கு, இயக்குனர் எழில் தான் இயக்கும் புதிய படத்தில் போலீஸ் கேரக்டர் கொடுத்துள்ளார்.
தற்போது சைமா விருது வழங்கும் நிகழ்சிக்காக துபாயில் முகாமிட்டிருக்கும் நிக்கி கல்ராணி, அங்கிருந்து திரும்பியதும் இந்தப்படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் களரிப்பயிற்று ஆகிய சண்டை நுணுக்கங்களை கற்றுக்கொள்ள இருக்கிறாராம். இதுதவிர ஏற்கனவே தமிழில் ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’ மற்றும் பாபி சிம்ஹாவுடன் ‘கோ-2’ ஆகிய படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார் நிக்கி கல்ராணி.