சமீபத்தில் பெங்களூருவில் உள்ள தனது வீட்டிற்கு சென்றிருந்த நிக்கி கல்ராணி அங்கு தங்கியிருந்தபோது எதேச்சையாக கதவை திறந்ததில் காலில் அடிபட்டுக்கொண்டார். ஆனால் பிராக்சர் மாதிரி பெரிய காயம் இல்லையென்றாலும் கால் பாத்தில் கட்டுப்போட்டும் அளவுக்கு அது கொண்டுவந்துவிட்டது..
இருந்தாலும் தொடர்ந்து படப்பிடிப்பு உள்ளதால் கட்டுப்போட்டுக்கொண்டே லாரன்சுடன் ‘மொட்ட சிவா கெட சிவா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் நிக்கி கல்ராணி.. தெளுகுப்படமான ‘பட்டாஸ்’ படத்தின் ரீமேக்காக உருவாக்கி வரும் இந்தப்படத்தில் ரிப்போர்ட்டர் வேடத்தில் நடிக்கிறார் நிக்கி கல்ராணி.