இரண்டு ‘அரை சதம்’ அடித்த சந்தோஷத்தில் நிக்கி கல்ராணி..!

 

இந்த வருடம் தென்னிந்திய சினிமாவை, குறிப்பாக தமிழ் சினிமாவை ‘டார்லிங்’கில் கலக்கிய நிக்கி கல்ராணி ஒரு கலக்கு கலக்கத்தான் போகிறார். இதற்கான அச்சாரத்தை இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான ‘டார்லிங்’ படம் வலுவாக போட்டுத்தந்து விட்டது. இப்போது 5௦ நாட்களையும் வெற்றிகரமாக தாண்டிவிட்டது.

இது ஒரு பக்கம் என்றால் கன்னடத்தில் சிறப்பு தோற்றத்தில் நிக்கி கல்ராணி நடித்த ‘சித்தார்த்தா’ படமும் 5௦ நாட்கள் என்கிற இலக்கை சமீபத்தில் தான் தொட்டது. சமீபத்தில் இந்த வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார் நிக்கி. தவிர, தமிழில் ஆதியுடன் ‘யாகவராயினும் நா காக்க’ மற்றும் சிம்ஹாவுக்கு ஜோடியாக கே.வி.ஆனந்தின் இணை இயக்குனர் இயக்கும் பெயரிடப்படாத படம் என தமிழில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மலையாளத்தில் ஜனப்ரிய நாயகன் திலீப்புக்கு ஜோடியாக இவர் நடித்துவரும் ‘இவன் மர்யாதராமன்’ படம் வரும் சம்மர் ரிலீஸாக வெளியாக இருக்கிறது. அதுமட்டுமல்ல வினீத் சீனிவாசன் ஜோடியாக ‘ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா’ மற்றும் சுரேஷ்கோபியுடன் ‘ருத்ர சிம்ஹாசனம்’  ஆகியவற்றிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் நிக்கி கல்ராணி.

DarlingNikki GalraniRudhra Simhasanamஇவன் மர்யாதராமன்சித்தார்த்தாடார்லிங்நிக்கி கல்ராணிருத்ர சிம்ஹாசனம்