ரௌடியிசத்தை புதிய கோணத்தில் காட்டவரும் ‘யாரோ இவன்’

‘யாரோ இவன்’ என இந்தப்படத்திற்கும் ‘உதயம் என்.ஹெச்-4’ படத்தின் சூப்பர்ஹிட் பாடலின் முதல் வார்த்தையைத்தான் தான் இயக்கியுள்ள படத்திற்கும் டைட்டிலாக வைத்திருக்கிறார் இயக்குனர் பிரபு ஸ்ரீனிவாஸ். இவர் ‘பொல்லாதவன்’, ‘ஆரம்பம்’, ‘தலைநகரம்’ உட்பட 100 படங்களுக்குமேல் நடன இயக்குனராக பணியாற்றியவர்.

அதுமட்டுமல்ல ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தை கன்னடத்தில் ‘பாரிஜாதம்’ என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கியவர் இவர்தான். அந்தப்படத்தின் தயாரிப்பாளர்தான் இந்த ‘யாரோ இவன்’ படத்தையும் தயாரிக்கிறார். சந்தோஷ்ராஜ், பிரியங்கா இருவரும் புதுமுகங்களாக அறிமுகம் ஆகிறார்கள்.

‘ஆரண்யகாண்டம்’ படத்தில் வித்தியாசமாக சொல்லப்பட்ட ரௌடியிசத்தைப்போல இதிலும் ரௌடியிசத்தை புதியகோணத்தில் ஆக்ஷன் பிளாக்கில் சொல்லியிருக்கிறாராம் பிரபு ஸ்ரீனிவாஸ்.

Yaaro Ivan
Comments (1)
Add Comment
  • https://advokat-kz.kz

    230526 294707I discovered your weblog website on google and examine quite a few of your early posts. Continue to sustain up the superb operate. I simply extra up your RSS feed to my MSN News Reader. In search of forward to reading much more from you later on! 796601