‘நெஞ்சில் துணிவிருந்தால்’ இசை விழாவில் ‘ஏஞ்சலினாவை அறிமுகப்படுத்திய சுசீந்திரன்..!

சுசீந்திரனின் அதிரடியாக வெளியாக இருக்கும் படம் தான் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.. சந்தீப், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்தப்படத்தில் மெஹ்ரீன் கதாநாயகியாக நடித்துள்ளார்.. அதிரடி ஆக்சன் த்ரில்லராக இந்தப்படம் உருவாகியுள்ளது. டி.இமான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாராகிவரும் சுசீந்திரன் இன்று இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்தினார்.

இந்தப்படத்தின் பாடல்களை நடிகர் கார்த்தி வெளியிட்டார். அதுமட்டுமல்ல தற்போது முற்றிலும் புதுமுகங்களை வைத்து தான் இயக்கிவரும் ‘ஏஞ்சலினா’ படத்தின் படக்குழுவினரையும் இந்த விழா மேடையில் ஏற்றி அறிமுகப்படுத்தி வைத்தார் சுசீந்திரன். இந்த விழாவை வில்லன் நடிகரான ஹரிஷ் உத்தமன் தொகுத்து வழங்கியது புது ஆச்சர்யம்..

Harish UthamanKarthiNenjil ThunivirunthalSundeepVikranthஏஞ்சலினாகார்த்திசந்தீப்சுசீந்திரன்நெஞ்சில் துணிவிருந்தால்விக்ராந்த்ஹரிஷ் உத்தமன்