சமுதாய அவலங்களை பற்றி பேசும் படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் இந்த காலகட்டத்தில், ஒரு சமுதாய பிரச்னையை அழுத்தமாகவும் அழகாகவும் கூறியுள்ள படம் தான் ‘அறம்’. கோபி நைனார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக மைய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜிப்ரானின் இசையில், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஒரு நேர்மையான கலெக்டராக நயன்தாரா அசத்தியுள்ளார். என்கிறார் இந்தப்படத்தை வெளியிடும் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன்.. இவர்தான் ‘விக்ரம் வேதா’ படத்தை வெளியிட்டவர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அறம்’ படத்தை வரும் நவ-10ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.