‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை தொடர்ந்து தற்போது ‘நண்பேன்டா’ என்கிற படத்திலும் நயன்தாராவுடன் இணைந்து நடித்துவரும் உதயநிதி, ஒரு கட்டத்தில் அவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றும் பாராட்டினார். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின்போதே ஹன்ஷிகா நடித்த கேரக்டரில் நடிக்க நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்தாராம் உதயநிதி.
ஆனால் அப்போது நயன்தாரா படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் விலகியிருந்த நேரம் என்பதால், அன்புடன் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம். திரும்பவும் அவர் முழு வீச்சுடன் நடிக்க ஆரம்பித்தபோது மீண்டும் தனது படத்தில் நடிக்க அழைத்தபோது, உடனே ஒப்புக்கொண்டார். அந்த நல்ல நட்பு தான் தற்போது ‘நன்பேண்டா’ படத்திலும் தொடர்கிறது என்கிறார் உதயநிதி.