நயன்தாராவை சந்தித்தார் இஷா தல்வார்..!


2012ல் தேசியவிருதுகளை பெற்ற படமான ‘தட்டத்தின் மறயத்து’ மூலம் மலையாள இளைஞர்களை கிறங்கடித்தவர் தான் இஷா தல்வார். தற்போது ‘தட்டத்தின் மறயத்து’ ரீமேக்கான ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இஷா தல்வார் நடித்து கடந்த வருடம் மலையாளத்தில் நான்கு படங்கள் வெளியானது ஆச்சர்யமான நிகழ்வு தான்.

மலையாள திரையுலகை மிகவும் நேசிக்கும் இவர் நயன்தாராவின் தீவிர ரசிகையும் கூட. அதனால் சமீபத்தில் கேரளா சென்றிருந்த இவர், அங்கே மம்முட்டியுடன் நயன்தாரா நடித்துவரும் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா இருப்பதை கேள்விப்பட்டு அவரை நேரில் சென்று சந்தித்தார்.

நயன்தாராவை சந்தித்ததை பற்றி “ஸ்தம்பித்து நின்றுவிட்டேன்.. அவரின் ரசிகையாக அவரை சந்தித்ததில் ரொம்பவே மகிழ்ச்சி என டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார் இஷா தல்வார். இதேபோல கடந்த மாதத்தில் நயன்தாராவும் தனது மனம் கவர்ந்த நடிகையான மஞ்சு வாரியரை, அவர் நடித்துவரும் படப்பிடிப்பு தளத்துக்கே சென்று சந்தித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Isha TalwarNayantharaNayanthara meets Isha Talwarஇஷா தல்வார்தட்டத்தின் மறயத்துநயன்தாராநயன்தாராவை சந்தித்தார் இஷா தல்வார்..!பாஸ்கர் தி ராஸ்கல்