தேர்தலுக்கு முன் மக்களை தேடிவரும் நயன்தாரா..!

மேலே சொன்ன வாக்கியத்தில் கொஞ்சம் கூட போய் இல்லை.. அக்மார்க் உண்மை.. ஆனால் என்ன தேர்தலுக்காக நயன்தாரா மக்களை சந்திக்க வருவது நேரடியாக இல்லை.. தொலைக்காட்சி பெட்டிகள் மூலமாகத்தான்.. அதுவும் யாருக்காகவும் ஓட்டுக்கேட்டு அல்ல.. வாக்களார்கள் அனைவரையும் தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுபோடச்சொல்லி அன்பாக வற்புறுத்துவதற்காக.

ஆம் இந்தமுறை தேர்தலில் அதிக அளவு வாக்குப்பதிவை கொண்டுவருவதற்காக வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரபலங்களை வைத்து பிரச்சார படங்களை தயாரித்து வருகிறது தேர்தல் ஆணையம். இதில் தான் நயன்தாரா நடித்துள்ளார்.. இன்னும் கொஞ்ச நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் உங்கள் வீட்டு டி.விக்களில் அடிக்கடி தோன்ற இருக்கிறார்.. அவர் சொல்வதற்காவது வாக்குச்சாவடிக்கு ஒரு எட்டு போய்விட்டு வந்துவிடுங்களேன்.

Election 2016Tamilnaduநயன்தாரா