மலேசியாவில் ‘கபாலி’யாக மாறிய நயன்தாரா..!


சென்னையில் படப்பிடிப்பு தவிர வேறு பொது இடங்களில் நயன்தாராவை பார்த்ததாகவோ அல்லது நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துகொண்டதாகவோ செய்திகள் வெளியாகி பார்த்திருக்கிறீர்களா..? இருக்காது.. காரணம் அவர் தனது பிரைவசியை பெரிதும் விரும்புபவர். அதேபோல ரசிகர்களை சந்தித்ததும் அவர்களுடம் போட்டோ எடுத்துக்கொண்டார் என்பதும் கூட அறிய நிகழ்வுதான்..

ஆனால் இதே நயன்தாரா விக்ரமுடன் நடிக்கும் ‘இருமுகன்’ படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக கடந்த வாரத்திற்கு முன் மலேசியா சென்றிருந்தார் அல்லவா..? அங்கே தனது கொள்கையை தளர்த்தி தன்னை சந்திக்க வந்த ரசிகைகளுடன் போட்டோ, செல்பி எடுத்து அவர்களை சந்தோஷப்படுத்தினார்.

கிட்டத்தட்ட சில மாதங்களுக்கு முன் ‘கபாலி’ படப்பிடிப்புக்காக ரஜினி மலேசியா வந்தபோது ரசிகர்களின் வேண்டுகோளை மறுக்காமல் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது போல, ரசிகைகளுடன் புகைப்படம் எடுப்பதில் நயன்தாராவும் மலேசியாவில் இன்னொரு ‘கபாலி’யாக மாறிப்போனார் என்பதுதான் உண்மை.

Iru MuganKabaliMalaysiaNayanthara