மாடர்ன் கேரக்டர்களாகட்டும் தனித்துவமான கேரக்டர்களாகட்டும் எதுவானாலும் நயன்தாராவுக்கு மட்டும் சரியாக அமைந்துவிடும்.. இதில் புராண கேரக்டர்களும் விதிவிலக்கல்ல. கடந்த சில வருடங்களுக்கு முன் தெலுங்கில் ராமராஜ்யம் படத்தில் சீதாவாக நடித்தார் நயன்தாரா.
இப்போது மகாபாரதத்தை மையமாக வைத்து உருவாகும் ‘குருசேத்ரா’ என்கிற கன்னட படத்தில் உருவாக இருக்கும் படத்தில் திரௌபதி கேரக்டரில் நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடைபெறு வருகிறதாம். துரியோதனன் கேரக்டரில் கன்னட நடிகர் தர்ஷன் நடிக்க, கிருஷ்ண பரமாத்மாவாக ‘பருவராகம்’ ரவிச்சந்திரன் நடிக்க இருக்கிறாராம்.