என்னடா இது நயன்தாரா இப்படி ஒரு படத்தில் நடிப்பதாக கேள்விப்படவில்லையே என குழம்ப வேண்டாம். 2009ல் தெலுங்கில் வெளியான ‘ஆஞ்சநேயடு’ படத்தைத்தான் தமிழில் ‘ரிப்போர்ட்டர்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து தீபாவளி தினத்தில் வெளியிட இருக்கிறார்களாம். இந்தப்படத்தில் ஆந்திர சினிமாவின் மாஸ் மகாராஜ் ரவிதேஜா ஹீரோவாக நடித்திருக்கிறார். படத்தை பரசுராம் என்பவர் இயக்கியுள்ளார்.
இந்தபடத்தில் நயன்தாரா பத்திரிகை நிருபராக அதிரடியான வேடத்தில் நடித்துள்ளார். மேலும் நாசர், சுமன், சோனு சூட், கோட்டா சீனிவாசராவ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டு நயன்தாரா மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறார்கள். ‘ஆரம்பம்’ நயன்தாராவை பார்க்க முடியாதவர்கள், ‘ரிப்போர்ட்டர்’ நயன்தாராவை பார்க்க வரமாட்டார்களா என்ன?
769750 450233This internet site could be a walk-through its the data you wanted in regards to this and didnt know who need to. Glimpse here, and youll absolutely discover it. 150535