விநாயகர் சதுர்த்திக்காக நயன்தாராவை வளைத்த சன் டிவி…!

நயன்தாராவை அவரைத்தவிர யாரும் புரிந்துகொள்ள முடியாது என்பது உண்மை தான். பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குனர்கள் என தேடி வரும் வாய்ப்பை ஒதுக்கி விட்டு, அறிமுக இயக்குனர்கள், கதையின் நாயகி வேடம், சின்ன ஹீரோக்கள் என புது ரூட்டில் ஓட ஆரம்பித்து வெகு நாளாகிறது..

அதேபோல தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக படத்தின் பிரஸ்மீட், இசைவெளியீடு, பிரிமியர் ஷோ, டிவி புரமோஷன் என எதிலும் தலைகாட்ட (விரும்ப) மாட்டார் நயன்தாரா. ஆனால் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார் நயன்தாரா.

தற்போது அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘அறம்’ படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதனால் இந்த விநாயகர் தின சிறப்பு நிகழ்ச்சியில் அறம் படம் பற்றி ரசிகர்களுக்காக பல செய்திகளை பகிர்ந்துகொள்ள இருக்கிறாராம் நயன்தாரா. இந்த நிகழ்ச்சியில் நயன்தாராவுடன் உரையாடுகிறார் சன் டிவி அஞ்சனா.

ArammNayantharaSunTVஅறம்சன் டிவிநயன்தாரா