நடிகர்சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய நாசர் குழுவினர்..!


கடந்த பத்து வருடங்களாக நடக்காத ஒரு நிகழ்வாக நடிகர்சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்கள் நடிகர்சங்கத்தின் புதிய நிர்வாகிகள்.. ஆண்களுக்கு வேட்டி, பெண்களுக்கு சேலை இவற்றுடன் ஸ்வீட் பாக்ஸ் சேர்த்து தீபாவளி பரிசாக கொடுத்தனர்.

வந்திருந்த, சுமார் 2௦௦௦ உறுப்பினர்கள் முகத்திலும் ஒற்றுமையாக இணைந்ததற்கான சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. வெளியூரில் இருப்பவர்களுக்கு அவர்கள் வீட்டிற்கே பரிசுப்பொருட்கள் சென்று சேரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் நாசர், விஷால், கார்த்தி, எஸ்.வி.சேகர் ஆகியோர் கலந்துகொண்டு இரண்டு ஆண்டுகளுக்குள் நடிகர்சங்க கட்டடம் கட்டப்படும் என கூறி வந்திருந்த உறுப்பினர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

KarthiKarunasNasarPonvannanVishal