‘புலி’யின் குகைக்குள் நுழைகிறாரா நந்திதா..?

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘புலி’ படத்தின் ஷூட்டிங் தற்போது ஆந்திராவில் உள்ள தலக்கோணம் நீர்வீழ்ச்சி அருகே நடைபெற்று வருகிறது. ஸ்ருதிஹாசன், ஹன்சிகா என இரண்டு கதாநாயகிகள், கூடவே சீனியர் கதாநாயகியாக ஸ்ரீதேவி ஆகியோர் ஏற்கனவே இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது ஆளாக படத்தில் நுழைய இருக்கிறார் ‘அட்டகத்தி’ நந்திதா..

நன்றாக நடிப்பவர் என்று பெயர் வாங்கினாலும், தன்னைத்தேடி கிராமத்து வேடங்களாகவே தொடர்ந்து வந்துகொண்டு இருப்பதால் கொஞ்சம் சலிப்படைந்திருந்த நந்திதாவுக்கு இந்த பேண்டசி கதைக்களம் நிச்சயம் ஜாக்பாட் தான். அதிலும் குறுகிய காலத்தில் விஜய் படத்தில் நடிப்பது என்பது டபுள் ஜாக்பாட் அடித்த மாதிரித்தான்.

‘புலி’Chimbu DevanPuliVijayசிம்புதேவன்நந்திதாவிஜய்ஸ்ரீதேவிஸ்ருதிஹாசன்ஹன்சிகா