தென்னிந்தியாவைப் பொறுத்தவரை மிக சென்சிட்டிவ்வான அரசியல் போராட்டங்களில் ஒன்று இலங்கை உள்நாட்டுப் போர். அதை மையப்படுத்தி தமிழில் சில படங்கள் வெளிவந்திருந்தாலும் தெலுங்கில் அந்தமாதிரியான படங்கள் வெளிவந்தது இல்லை.
அந்தவகையில் முதன்முறையாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை கதைக்களமாக கொண்டு தெலுங்கில் உருவாகியிருக்கும் “ஒக்காடு மிகிலாடு’ என்கிற படம் ‘நான் திரும்ப வருவேன்’ என தமிழ் மொழியில் வெளியாகவுள்ளது. இந்தப்படத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கதாபாத்திரத்தில், தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ் நடித்துள்ளார் என தெரிகிறது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றுள்ளது. படத்தை அஜய் ஆண்ட்ரூஸ் இயக்க பத்மஜா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.. தமிழில் வசனம் மற்றும் பாடல்களை சுரேஷ் ஜித்தன் எழுதியிருக்கிறார். செப்டம்பர் மாதம் தெலுங்கில் வெளியாகும்போதே தமிழிலும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்