திருமண பந்தத்தில் நுழைகிறார் நமீதா..!

ரசிகர்களை செல்லமாக ‘மச்சான்ஸ்’ என அழைப்பவர் நடிகை நமீதா. விஜயகாந்த் ஜோடியாக ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நமீதா. தொடர்ந்து ‘ஏய்’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘சாணக்யா’, ‘கோவை பிரதர்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன்பின் பட வாய்ப்புகள் குறைந்ததும் நமீதா திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றே சொல்லப்பட்டது.

ஆனாலும் அதுகுறித்து மௌனம் காத்த நமீதா, சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தார். இதை தொடர்ந்து நமீதாவுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. புதுமுக நடிகர் வீரேந்திரா என்ற வீராவை மணக்கப்போவதாக அவர் அறிவித்து இருக்கிறார்.

‘மியா’ படத்தில் நமீதாவும் வீராவும் இணைந்து நடித்து வந்தனர். அப்போது இருவரும் நெருங்கி பழகி காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதை வீடியோவில் பேசி நமீதா வெளியிட்டு இருக்கிறார். இவர்கள் திருமணம் வரும் நவ-24–ந் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளது.

NamitaVeeraநமீதாவீரா