‘காதலில் விழுந்தேன்’ என்கிற படம் மூலம் திரையுலகில் கால் பதித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்தப்படத்திற்கு கொடுத்த அதிரடி பப்ளிசிட்டியால் பாப்புலரானவர்கள் தான் நகுல்-சுனைனா ஜோடி. அதே சூட்டோடு அடுத்ததாக மாசிலாமணி என்கிற படத்திலும் இவர்கள் இணைந்து நடித்தனர்.
தற்போது இவர்கள் இருவருமே அங்கொன்றும் இங்கொன்றுமாக படங்களில் நடித்து வந்தாலும் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. காதலில் விழுந்தேன் வெளியாகி சுமார் 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் வெற்றி ஜோடிகளான நகுல் மற்றும் சுனைனா இணைந்து எரியும் கண்ணாடி, என்ற படத்தில் நடிக்கின்றனர்.
இளைஞர்களின் நாடி துடிப்பான யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடலாசிரியராக பணியாற்றுகிறார்.
இப்படத்தில் மனிஷா கொய்ராலா, சுரேஷ் மேனன், அபர்ணா கோபிநாத், ரேவதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தினை இயக்குநர் சச்சின் தேவ் இயக்குகிறார்.