“ஆறு மணிக்கு முன்னாடி பாய்… ஆறு மணிக்கு அப்புறம் ப்ளேபாய்” – நாகார்ஜூனா அடிக்கும் பஞ்ச்

“நான் ஆறு மணிக்கு முன்னாடி பாய்… ஆறு மணிக்கு அப்புறம் ப்ளேபாய்” – இது விஜய்யோ இல்ல அஜித்தோ அவங்களோட அடுத்த படத்துக்காக பேசுற பஞ்ச் டயலாக் இல்லை.. தெலுங்குல நாகார்ஜூனா நடிச்சுட்டு வர்ற ‘பாய்’ படத்துல அவர் பேசுற வசனத்துல ஒரு சாம்பிள் தான் இது.

கடந்த வருஷம் ஷீர்டி சாய்னு ஒரு ஆன்மீகப்படம், தமருகம்னு ஒரு ஆக்‌ஷன் படம் நடித்த நாகார்ஜுனா இந்த வருடம் க்ரீக்வீருடு என்ற ஆக்‌ஷன் படத்தில் நடித்து படமும் ரிலீஸாகிவிட்டது. இப்போது அடுத்து எடுத்துள்ள ஆக்‌ஷன் அவதாரம்தான் பாய். வீரபத்ரம் இயக்கியுள்ள இந்தப்படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் நாகார்ஜூனா.

இந்தப்படத்துல நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ரிச்சா கங்கோபாத்யாய். படத்திற்கு இசையமைப்பவர்.. வேறு யார் ஆந்திர சினிமாவின் அதிரடி மன்னன் தேவிஸ்ரீபிரசாத் தான். இந்தப்படத்தின் இசை வெளியீட்டை செப்டம்பர் 1ஆம் தேதி நடத்தவிருக்கிறார்கள்.

நாகார்ஜூனா
Comments (3)
Add Comment
  • สล็อตเว็บตรงแตกดี อันดับ 1 Lsm99

    471212 626653I admire your work , regards for all the useful blog posts. 769159