கதையில் முக்கியத்துவமுள்ள கேரக்டர் என்றால் எந்த நடிகருடனும், எந்த மொழியிலும் நடிக்கத் தயாராக இருப்பவர் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால். அந்தவகையில் தற்போது புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடித்துள்ள ‘மைத்ரி’ என்ற கன்னட படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் மோகன்லால். இந்தப்படத்தில் அவருக்கு விஞ்ஞானி கதாபாத்திரம்.
கிரிராஜ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக பாவனா நடிக்க, முக்கிய வேடத்தில் அது குல்கர்னி நடித்திருக்கிறார். படத்திற்கு இசையமைத்துள்ளவர் நம்ம இசைஞானி இளையராஜா. கடந்த வாரம் வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகியுள்ளதை தொடர்ந்து தெலுங்கில் இந்தப்படத்தை நாகார்ஜூனாவை வைத்து ரீமேக் செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் என்.எஸ்.ராஜ்குமார் தகவல் வெளியிட்டுள்ளார்.