கடந்த வருடம் நடிகர்சங்க தேர்தல் நடைபெற்ற விதம் சாதாரண ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுமக்களிடம் கூட கவனம் பெற்றது. அந்த அளவுக்கு தமிழக தேர்தல் போல பரபரப்பாக நடைபெற்றது.. அதனாலேயே தற்போது பொறுப்பேற்றுள்ள நாசர் தலைமையிலான நடிகர் சங்கத்தின் மீது எதிரணியினர் அவ்வப்போது குற்றச்சாட்டுகளை க்கொரிவன்தனர்..
நடிகர்சங்கம் நட்சத்திர கிரிக்கெட் நடத்தி, நடிகர் சங்க கடனை அடைத்து நடிகர் சங்க நிலத்தை எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனத்திடம் இருந்து மீட்டது.. ஆனால் நட்சத்திர கிரிக்கெட் நடத்தியதில் ஊழல் நடந்திருக்கிறது என குற்றச்சாட்டுகளை அடுக்கின.. ஆனால் நாசரும் விஷாலும் இந்தப்புகார் ஆதாரமற்றது என கூறிவந்தனர்.
இந்தநிலையில் நேற்று நடிகர்சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய நிகழ்ச்சியில் பேசிய விஷால் நாளை (இன்று) பொருளாளர் கார்த்தி கணக்கு வழக்கு விபரங்களை இணையதளத்தில் வெளியிடுவார் என கூறியிருந்தார்.. அதன்படி இன்று நட்சத்திர கிரிக்கெட் உட்பட கடந்த ஆகஸ்ட் வரையிலான கணக்கு வழக்குகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் 2016, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கணக்குகள் சமர்ப்பிக்கப்ட்டுள்ளன. அதில் சங்கத்திற்கு, கிரிக்கெட் நடத்தியதன் மூலம் கிடைக்கப்பட்ட வருவாய் 12 கோடியே 57 லட்சத்து 62 ஆயிரத்து 776 ரூபாய் என்றும், சங்க நிலம் மீட்பு, கிரிக்கெட் நடத்திய செலவு 4 கோடியே 10 லட்சத்து 61 ஆயிரத்து 942 ரூபாய் என்றும், மீதம் 8 கோடியே 47 லட்சத்து 834 ரூபாய் இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது