நடிகர் சங்கத்திற்குள் ஒரு அதிரடியான தேர்தலை கொண்டு வந்ததற்கு முக்கிய நிகழ்வாக அமைந்தது தான் நடிகர் சங்கம்-எஸ்.பி.ஐ சினிமாஸ் ஒப்பந்தம்.. இந்த திட்டத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என நாசர், விஷால் தரப்பினர் போர்க்கொடி தூக்கியும் சரத்குமார்-ராதாரவி தரப்பினர் அதற்கு இசையாததால்தான், நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலில் தோல்வியை சந்தித்தனர்..
அதன்பின்னர் சரத்குமார் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பே தான் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக கூறினார்.. ஆனால் அது தவறான தகவல் என்பது பின்னர் உறுதியானது.. அதை தொடர்ந்து இப்போதைய நடிகர் சங்கம் விடாப்பிடியாக நின்று எஸ்.பி.ஐ சினிமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பினருக்கும் எந்த மனக்கசப்பும் இல்லாமல் இந்த ஒப்பந்தத்தை சுமூகமாக ரத்து செய்ய வைத்திருக்கின்றனர்.