விநாயகர் கோவிலில் தினசரி பூஜை : நாசர் உத்தரவு


சென்னை வரலாறு காணாத மழைவெள்ள பாதிப்பில் சிக்க, நடிகர்சங்க உறுப்பினர்களுடன் சேர்ந்து நிவாரண பணிகளிலும், நிவாரண நிதி திரட்டுவதிலும் ஈடுபட்டு வருகிறார் நடிகர் சங்க தலைவர் நாசர் அத்துடன் அவ்வப்போது நடிகர்சங்க கட்டடம் பக்கமாக விசிட்டும் அடித்து வருகிறார்.

நடிகர்சங்கத்தில் இருந்த விநாயகர் கோவில் இடிக்கப்பட்டபோது விநாயகர் சிலையை கட்டிடத்தின் கடைசியில் வைத்து பின்புற தெருவின் பக்கம் முகப்பு இருப்பதுபோல் முந்தைய நடிகர்சங்க நிர்வாகிகள் செய்து விட்டார்கள். நடிகர்சங்க புதிய நிர்வாகிகள் எவருக்கும் இந்தவிஷயம் தெரியாமல் இருந்தது,

இதனை அறிந்த நாசர் நேற்று முன் தினம் செயற்குழு உறுப்பினர் நடிகர் உதயாவுடன் சென்று அதை பார்வையிட்டார். அப்போது “தினமும் விநாயகருக்கு முறைப்படி பூஜை நடக்க வேண்டும்… அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யுங்கள்” என்று அலுவலக நிர்வாகியிடம் அன்புக்கட்டளையும் போட்டுவிட்டார் நாசர்.

ChennaiChennai FloodNadigar SangamNasar