தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 8-ம்தேதி ஞாயிறு, மதியம் 2 மணிக்கு சென்னை அண்ணா சாலையிலுள்ள காமராஜர் அரங்கில் நடைபெறும். இதற்கான அழைப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்க பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்களான முன்னணி நடிகர் நடிகைகள் மூத்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது உறுப்பினர் அடையாள அட்டையுடன் வந்து தவறாமல் பங்கேற்க வேண்டுமென்றும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.