‘நானும் ரௌடி தான்’ படத்தின் டீசரை பார்த்தவர்கள் அதில் விஜய்சேதுபதியின் ஹேண்ட்சம் லுக்கையும், நயன்தாராவை அவர் மிரட்டுவதையும் பார்த்து அட இது புதுசா இருக்கே என ஆச்சர்யப்பட்டு இருப்பார்கள். தனுஷ் தயாரித்துள்ள இந்தப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.. இல்லையில்லை.. இன்ச் பை இன்ச்சாக செதுக்கியுள்ளார்.
இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ள லைக்கா நிறுவனம் வரும் அக்-21ல் இந்தப்படத்தை படத்தை கிட்டத்தட்ட 475 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். கடந்த ஆக-28 முதல் அக்-21 வரையிலான 55 நாட்களில் ‘தனி ஒருவன்’, ‘மாயா’, மலையாளத்தில் வெளியான “லைப் ஆப் ஜோஸுட்டி” ஆகிய படங்களை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.