பிரசாந்த்தை ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ராதாபாரதி, தற்போது ‘நண்பர்கள் நற்பணி மன்றம்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். படத்தில் செங்குட்டுவன், அக்சயா என புதுமுகங்கள் நடித்தாலும் இயக்குனர் நம்புவது நான் கடவுள் ராஜேந்திரன், ஆடுகளேன் நரேன், சிங்கம்புலி, இமான் அண்ணாச்சி என்கிற நால்வர் டீமைத்தான்.
குறிப்பாக தற்போது தனி ரசிகர்மன்றம் வைக்கும் அளவுக்கு பாப்புலராகிவிட்ட நான் கடவுள் ராஜேந்திரன் இந்தப்படத்தில் தேனி பகுதியில் கறிக்கடை வைத்திருப்பவராக நடித்திருக்கிறார். ஆடு வெட்டுபவர் தான் என்றாலும் அதன் மீதும் இரக்கம் காட்டுவாராம் ராஜேந்திரன்.
ஒருமுறை தேனி நகர வீதிகளில் ஹீரோவை கத்தியுடன் துரத்திக்கொண்டு இவர் ஓடும் காட்சியை படமாக்கியபோது சிலர் அதை உண்மை என நினைத்து போலீசுக்கு தகவல் கொடுத்துவிட, ராஜேந்திரனை மடக்கி பிடித்த போலீஸ், அதன்பின்னர் உண்மையை அறிந்து பொதுமக்களிடம் விளக்கினார்களாம்.