செப்-1ல் ‘நாய்கள் ஜாக்கிரதை’ இசை வெளியீடு..


சிபிராஜ் கதாநாயகனாக நடித்து வரும் நாய்கள் ஜாக்கிரதை படம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதென்னவோ உண்மைதான். காரணம் சிபிராஜ் இதில் புலனாய்வு அதிகாரியாக நடிப்பதுடன் அவருடன் ஆளுயர ஜெர்மன் ஷெப்பர்டு நாய் ஒன்றும் நடிக்கிறது.

சிபிராஜின் சொந்த பேனரிலேயே இந்தப்படம் தயாராகி வருகிறது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டை வரும் செப்டம்பர்-1ஆம் தேதி ரேடியோ மிர்ச்சி எப்.எம் ஸ்டேஷனில் வைத்து வெளியிட இருக்கிறார்களாம். சிபிராஜ் நடித்த ‘நாணயம்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் தான் இந்தப்படத்தையும்  இயக்கியுள்ளார். தரண்குமார் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சிபிராஜ்நாய்கள் ஜாக்கிரதை