இன்றளவும் புத்தாண்டு பிறக்கிறது என்றால் கமலின் இளமை இதோ இதோ’ பாடல் தான் ஞாபகத்துக்கு வரும். அதுதான் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கும். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிம்புவுக்கும் அப்படி ஒரு நியூ இயர் பாடலை கொடுக்கவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது.
சமீபத்தில் சிம்பு, ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அல்லவா..? இந்நிலையில், ஓவியாவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து உருவாகவுள்ள திரைப்படத்தில் சிம்புவின் இசையில் உருவாகியிருக்கும் `மரண மட்டை’ பாடல் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது.
ஆர்.ஜே.விஜய் எழுதிய இந்த பாடலை ஓவியா மற்றும் ஹரிஸ் கல்யாண் இணைந்து பாடியிருக்கின்றனர். இந்த பாடல் இடம்பெறும் படத்தை அனிதா உதீப் என்பவர் இயக்குகிறார்.