விறுவிறுப்பாக நடந்துவந்த ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்புக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார்கள் விஜய்யும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும். சொல்லப்போனால் இந்த தற்காலிக ஓய்வு விடும்படி முருகதாஸை கேட்டுக்கொண்டதும் விஜய் தான். அப்படி கேட்டது கூட தனக்காக இல்லை.. முருகதாஸுக்காகத்தான்.
முருகதாஸ் இங்கே ‘கத்தி’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் அதே வேளையில் பாலிவுட்டில் அக்ஷய்குமார்-சோனாக்ஷி சின்ஹாவை வைத்து அவர் இயக்கியுள்ள ‘துப்பாக்கி’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘ஹவுஸ்ஃபுல்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நடந்துகொண்டிருந்தன.
தற்போது ‘ஹவுஸ்ஃபுல்’ படம் வரும் ஜூன்-6ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் புரமோஷன் வேலைகளில் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்துகொள்ள வேண்டியது அவசியம் என்பதால் தான் ‘கத்தி’ படப்பிடிப்புக்கு தற்காலிக விடுமுறை அளித்துவிட்டு ‘ஹாலிடே’ கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள பாலிவுட்டுக்கு போய்விட்டார் முருகதாஸ்.