‘காஞ்சனா’ வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடிக்கும் ‘முனி- 3 கங்கா’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து ரிலீஸ் சம்பந்தமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது… கதாநாயகியாக டாப்ஸி நடிக்க, இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற ஸ்ரீமன், கோவைசரளா ஆகியோரும் இந்தப்படத்தில் நடிக்கிறார்கள்.
தற்போது இந்தப்படத்தை ‘முனி-3’ என்பதற்கு பதிலாக ‘காஞ்சனா-2’ என டைட்டிலை மாற்றியிருக்கிறார் லாரன்ஸ்.. காரணம் “‘காஞ்சனா-2 என டைட்டில் வைத்தால் ரசிகர்களிடம் எளிதில் ரீச்சாகும் என எனது தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள்.. எனக்கும் அது சரியென்றே பட்டதால் டைட்டிலை ‘காஞ்சனா-2’ என மாற்றியுள்ளோம்” என்கிறார் லாரன்ஸ்.. படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.