சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் ஹாலிவுட்டின் பிரமாண்டமான தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து படங்களை தயாரிக்க ஆரம்பித்திருக்கிறது. அதன் முதல்படியாக தயாராகியுள்ள படம் தான் ‘முண்டாசுப்பட்டி’.
விஷ்ணு, ‘அட்டகத்தி’ நந்திதா நடிக்கும் இந்தப்படத்தை ராம்குமார் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் 1980களில் இருந்த பைக் ஒன்றை பயன்படுத்தி இருக்கிறார்களாம். அது அடிக்கடி ரிப்பேராகி படப்பிடிப்பு தாமதமாகிவிடக்கூடாது என்பதற்காகவே ஒரு மெக்கானிக்கையும் படப்பிடிப்பு முழுவதும் கூடவே வைத்து படப்பிடிப்பை நடத்தினார்களாம்.
முழுக்க முழுக்க காமெடியாக உருவாகிவரும் இந்தப்படம் வரும் ஜூன் -13ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.