சூப்பர் ஸ்டார் தெரியும்.. அல்டிமேட் ஸ்டார் தெரியும்.. மல்டி இன்டர்நேஷனல் மெகா அல்டிமேட் சூப்பர்ஸ்டார் யார் தெரியுமா..? வேறு யார் நம்ம பிரேம்ஜி அமரனேதான்.. ஆனால் தனக்குத்தானே பட்டமெல்லாம் கொடுத்துக்கொள்ளும் அளவுக்கு சுய பில்டப்பில் எல்லாம் அவர் இறங்கவில்லை.
இந்தப்பட்டத்தை அவருக்கு கொடுத்திருப்பவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிதான். ஆமாங்க.. விஜய் ஆண்டனியுடன் ‘சலீம்’ படத்தில் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறார் பிரேம்ஜி. இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்த விஜய் ஆண்டனி தான், பிரேம்ஜியை இந்த பட்டத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
தனது அண்ணன் படங்கள் தவிர்த்து, வெளியாட்களின் படங்களில் ஏன் நடிப்பதில்லை என்று பிரேம்ஜியிடம் ஒருமுறை கேட்டபோது, “என் அண்ணன் படத்துல எனக்கு கிடைக்கிற கைதட்டல் மத்தவங்க படத்துல ரொம்ப குறைச்சலாத்தான் கிடைச்சது. நானும் எனணிப்பார்த்துட்டேன். அதனால அண்ணன் படம் மட்டும் பண்றதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்று அதற்கும் ஒரு வித்தியாசமான காரணம் சொன்னார் பிரேம்ஜி.
இப்போது விஜய் ஆண்டனியுடன் நடிக்க சம்மதித்திருக்கிறார் என்றால், கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் தானே..