சுதீப் படத்திற்கு கமல் தரப்போகும் கெளரவம்..!

நான் ஈ’ சுதீப் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் தான் ‘முடிஞ்சா இவனை புடி’.. தமிழ், கன்னடம் என இருமொழிபடமாக உருவாகியுள்ள இந்தப்படத்தின் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு உலகநாயகன் கமல் புதிய கெளரவம் தர இருக்கிறார்.

ஆம். இந்தப்படத்தின் பாடல்களை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் வருகிற 20ஆம் தேதி ஆன்று வெளியிட உள்ளார். ராக்லைன் வெங்கடேஷ் வழங்கும் இப்படத்தை எம்.பி.பாபு தயாரித்துள்ளார். கே.எஸ்.ரவிகுமார் தனது நெருங்கிய நண்பர் என்பதால் கமல் இந்த பாடல்களை வெளியிட ஒப்புக்கொண்டுள்ளார் என்பது சொல்லாமலே தெரிந்துவிட்டதே.

K S RavikumarKamalMudinja Ivana PudiMudinja Ivana Pudi Audio will be Launched By KamalSudeep