ராமானுஜத்தை ரசித்த ஜனாதிபதி..!

 

புகழ்பெற்ற தலைவர்களின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவேண்டுமென்றால் அதற்கு சரியான நபர் இயக்குனர் ஞானராஜசேகரன் தான். பெரியார், பாரதியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வெற்றி பெற்ற  அவர், கடந்த வருடம் கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கையைப் படமாக எடுத்தார்.

 பலரின் பாராட்டுக்களை பெற்ற இந்தப்படத்திற்கு இப்போது சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆம். கடந்த 26ஆம் தேதி நமது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்காக இந்தப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட, இந்தப்படத்தை பார்த்து ரசித்ததோடு, இது ஒரு சிறந்த முயற்சி என்று படக்குழுவினரை பாராட்டியும் இருக்கிறார்.

ராமானுஜமாக மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபினய் நடிக்க, அவருக்கு ஜோடியாக பாமா நடித்திருந்தார். படத்தை இயக்குனர் ஞான ராஜசேகரனின் மகள் உட்பட வெளிநாடு வாழ் இந்தியர்கள் நான்குபேர் சேர்ந்து தயாரித்துள்ளார்கள். சுஹாசினி, சரத்பாபு, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.

AbhinayBhamaGnanarajasekaranRamanujamஅபினய்சரத்பாபுசுஹாசினிஜெமினி கணேசன்ஞானராஜசேகரன்நிழல்கள் ரவிபாமாபாரதிபெரியார்ராமானுஜம்