முரளி பட டைட்டிலில் புதிய படம்- கதநாயகனாக நடிக்கிறார் கிருஷ்ணா

‘அலிபாபா’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் கிருஷ்ணா. அதன்பின் ‘கற்றது களவு’, ‘கழுகு’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த கிருஷ்ணா ‘கழுகு’ படத்தில் தனது நடிப்பினால் பலரையும் கவர்ந்தார். அவர் நடித்துள்ள ‘வானவராயன் வல்லவராயன்’ என்ற படம் விரைவில் திரைக்கு வர தயாராக உள்ளது. மேலும் ‘விழித்திரு’, ‘இல்ல ஆனாலும் இருக்கு’, ‘வன்மம்’ போன்ற படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணா.

இப்போது கிருஷ்ணா நடிக்கும் புதிய பட்த்திற்கு ‘இதயம்’ என பெயரிடப்பட்டுள்ளது.இது ஏற்கனவே நடிகர் முரளி நடித்து இருபது வருடங்களுக்கு முன் சூப்பர்ஹிட்டான படத்தின் டைட்டில் தான். ‘ஆண்மை தவறேல்’ என்ற படத்தை இயக்கிய குழந்தை வேலப்பன் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 12ஆம் தேதி துவங்குகிறது.இந்தப்படத்தை பட்டியல்’ சேகர் தயாரிக்கிறார். கிருஷ்ணா பிரபல தயாரிப்பாளரான பட்டியல் சேகரின் மகன் என்பதும் இயக்குனர் விஷ்ணுவர்தனின் சகோதரர் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

Krishnaகிருஷ்ணா
Comments (1)
Add Comment
  • auto verkopen

    806826 581088Interested in start up a online business on line denotes revealing your service also providers not only to humans within your town, nevertheless , to numerous future prospects which are cyberspace on many occasions. pays daily 863545