‘தெறி’ கேரள உரிமையை கைப்பற்றிய மோகன்லாலின் நண்பர்..!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து, வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாக இருக்கும் ‘தெறி’ படத்தின் ரிலீஸ் தொடர்பான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கேரளாவில் மட்டும் ஏற்கனவே விஜய் நடித்த ‘புலி’ படம் அதை வெளியிட்டவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதால் ‘தெறி’ பிசினஸ் முடிவதில் இழுபறி ஏற்பட்டது.. ‘தெறி’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, கேரள ரைட்ஸ் 6 கோடி ரூபாய் என்கிற நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்தார். ஆனால் தற்போது சில நாட்கள் இழுபறிக்கு பிறகு ‘தெறி’ படத்தின் கேரளா உரிமைக்கான வியாபாரம் 5.6 கோடி ரூபாய் என்கிற டீலில் வெற்றிகரமாக முடிவடைந்து ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது..

நேற்று வரை இந்தப் படத்தின் உரிமையை பிருத்விராஜ், ஆர்யா பங்குதாரர்களாக உள்ள ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் தான் வெளியிடுகிறது என வெளியான செய்திகள் வெறும் வதந்திதான் என்பதை இந்த ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. ஆம்.. இந்தப்படத்தை வெளியிடும் உரிமையை ப்ரைடே பிலிம் ஹவுஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.. இந்த நிறுவனத்துடன் கார்னிவல் மோஷன் பிக்சர் நிறுவனமும் இணைந்து ‘தெறி’ படத்தை வெளியிடுகிறது.. இந்த ப்ரைடே பிலிம் ஹவுஸ் நிறுவனத்தை குணச்சித்திர நடிகரான விஜய்பாபுவும் நடிகை சான்ட்ரா தாமஸும் இணைந்து நிர்வகித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்ல மலையாளத்தில் தொடர்ந்து திரைப்படங்களையும் தயாரித்து வருகின்றனர்.. தமிழ் இயக்குனரான அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘பெருச்சாழி’ படத்தை தயாரித்ததும் இந்த நிறுவனம் தான். இதன்மூலம் மோகன்லாலின் படங்களில் தொடர்ந்து நடிக்கும் அளவுக்கு அவருக்கு நெருங்கிய நண்பராக மாறிவிட்டார் விஜய்பாபு. தற்போது நடிகர் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘முதுகாவ்’ என்கிற படத்தையும் இவர் தான் தயாரித்து வருகிறார். இப்போது தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கும் முதல் முயற்சியாக ‘தெறி’ படத்தின் கேரள வியாபரத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

அட்லிஅருண் வைத்தியநாதன்ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம்ஆர்யாகலைப்புலி தாணுகார்னிவல் மோஷன் பிக்சர்கோகுல் சுரேஷ்சுரேஷ்கோபிதெறிபிருத்விராஜ்பெருச்சாழிப்ரைடே பிலிம் ஹவுஸ்முதுகாவ்விஜய்