மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுக்கு இந்தி சினிமாவில் நடிப்பது ஒன்றும் புதிதில்லை.. ஏற்கனவே ராம் கோபால்வர்மாவின் ‘கம்பெனி’ மற்றும் ‘ஆர்ஜிவி கி ஆக்’ ஆகிய படங்களில் சூப்பர் பெர்பாமன்ஸ் காட்டியவர்தான். கடைசியாக அவரது ஆஸ்தான இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘டெஸ்’ என்ற படத்தில் நடித்தார் மோகன்லால்.
தற்போது மீண்டும் இந்திக்கு செல்லும் வாய்ப்பு மோகன்லாலை தேடிவந்துள்ளது. உளவுத்துறை அதிகாரியாக அவர் நடிக்க இருக்கும் இந்தப்படத்தின் டைட்டில் “எஸ்கேப் ப்ரம் நோவேர்(ESCAPE FROM NOW HERE). இந்தப்படத்தை சஞ்சய் திரிபாதி என்பவர் இயக்குகிறார்..