மோகன்லாலுடன் மலையாள படத்தில் நடிக்கும் ஹன்ஷிகா..!

இந்தி திரையுலகில் இருந்து வந்தாலும் தமிழில் அறிமுகமான பின் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் ஹன்ஷிகா. மற்ற மொழிகளில் குறிப்பாக மலையாளத்தில் நடிக்கும் ஆர்வம் இருந்தாலும் அதற்கான நேரம் ஒதுக்க முடியாத நிலையில் இருந்தார் ஹன்ஷிகா..

ஆனால் இப்போது முதன்முதலாக மலையாள திரையுலகில் நுழையும் வாய்ப்பு ஹன்ஷிகாக்கு கிடைத்துள்ளது.. அதுவும் மோகன்லால் படத்தின் மூலமாக.. இந்தப்படத்தை இயக்கும் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன், ஹன்ஷிகா நடித்துள்ள போகன் படத்திற்கு வாழ்ந்து சொன்ன கையோடு, தனது படத்தில் ஹன்ஷிகா நடிப்பதையும் உறுதிப்படுத்திவிட்டார்.

இந்தப்படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடிப்பதற்காக விஷால் ஏற்கனவே ஒப்பந்தம செய்யப்பட்டுள்ளார். அவரும் முதன்முதலாக இந்தப்படத்தின் மூலம் தான் மலையாள திரையுலகில் நுழைகிறார் என்பது குறிப்பிடத்ததக்கது.

HansikaMohanlalபி.உன்னிகிருஷ்ணன்போகன்மோகன்லால்விஷால்ஹன்ஷிகா