கிரிக்கெட்டுல எப்படி சச்சின் பிரேக் பண்ணமுடியாத பல ரெக்கர்டுகளை வச்சிருக்காரோ அதே மாதிரி சினிமாவுலயும் சிலபேரு ஒருசில அன்பிரேக்கபிள் ரெக்கார்டை வச்சிருப்பாங்க.. அந்தவகைல மோகன்லாலும் ஒரு உடைக்க முடியாத சாதனை ஒன்ன வச்சிருந்தார்.
இப்ப அவரேதான் அதையும் உடைச்சிருக்கார். அப்படி என்ன ரெக்கார்டுன்னு கேக்குறீங்களா? சினிமாவுல அறிமுகமான காலத்துல பூர்ணிமா பாக்யராஜோட ஜோடியா நடிச்ச மோகன்லால் சில வருஷங்களுக்கு முன்னாடி போட்டோகிராபர்ங்கிற படத்துல பூர்ணிமாவோட மகள் சரண்யாவோடயும் ஜோடியா நடிச்சிருந்தார்.
அதே மாதிரி ‘நெற்றிக்கண்’ படத்துல ரஜினிக்கு ஜோடியா நடிச்சாங்களே மேனகான்னு ஒரு நடிகை, அவர்கூடவும் சில படங்கள்ல ஜோடியா நடிச்சிருந்தார் மோகன்லால். இப்ப மேனகாவோட மகள் மியா கூடவும் நடிச்சு தன்னோட ரெக்கார்ட தானே உடைக்கப் போறார். படத்தோட பேரு மிஸ்டர் ஃப்ராடு.. மேலும் பல்லவி கிருஷ்ணன், மஞ்சரி பட்னிஷ் என இன்னும் இரண்டு ஹீரோயின்களும் படத்துல உண்டு
.
இந்தப்படத்தை இயக்குபவர் பி.உன்னி கிருஷ்ணன். இவர் ஏற்கனவே மோகன்லாலை வச்சு ‘மாடம்பி’, ‘கிராண்ட் மாஸ்டர்’னு ரெண்டு சூப்பர்ஹிட் படங்களை இயக்கியிருக்கார். இந்தபடத்தோட படப்பிடிப்பு நேத்துல இருந்து ஆரம்பிச்சிருக்கு.