விஜய் படத்தில் அறிமுகமாகும் மாடல் அழகி துவாரா..!


இயக்குனர் ஏ.எல்.விஜய் டைரக்‌ஷனில் உருவாகியுள்ள ‘சைவம்’ படம் வரும் வெள்ளியன்று ரிலீஸாக உள்ளது. தெய்வத்திருமகளில் நம் மனதை கொள்ளையடித்த குட்டிப்பெண் சாரா தான் இந்தப்படத்தின் ஆணிவேர். அதுதவிர இந்தப்படத்தில் நாசரும் அவரது மகன் பாஷாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்தப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள பாஷாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் துவாரா. இவர் மாஸா, கிளினிக் பிளஸ் ஆகிய விளம்பரங்களில் நடித்து பிரபலமானவர். அதுமட்டுமல்ல பிரியதர்ஷன் இயக்கிய ‘காஞ்சிவரம்’ படத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது அந்தப்படத்தில் விஜய் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

AL VijayBhashaKanchivaramsaivam movieTwaraகாஞ்சிவரம்கிளினிக் பிளஸ்சைவம்துவாராபாஷாமாஸாவிஜய்