இரண்டே நிமிடத்தில் மிஷ்கின் மனதை சுட்டுப்பிடித்த இயக்குனர்

மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி என பலர் நடித்துள்ள ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. ராமபிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் ராம்மோகன் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த வாரம் வெளியாக இருக்கும் இந்த படத்தில் பாடல்கள் கிடையாது. படத்திற்கான பின்னணி இசையை ஜேக்ஸ் பிஜாய் அமைத்திருக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.ராமராவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின்இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா, மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி, பேபி மானஸ்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படம் குறித்த் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, ‘‘இப்படத்தில் என்னை நடிக்க கேட்டபோது முதலில் மறுத்து விட்டேன். திரும்பவும் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா கேட்டபோது, ‘இரண்டு நிமிடங்களில் கதை சொல்லி என்னை இம்பிரஸ் செய்தால் நடிக்கிறேன்’ என்று சொன்னேன். அதைப்போல இரண்டு நிமிடங்களில் கதை சொல்லி என்னை அசத்திவிட்டார் ராம்பிரகாஷ் ராயப்பா. அதன் பிறகே நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இந்த படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. இதில் பயணியாற்றிய அனைவரும் சிறந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்திருக்கிறார்கள். இப்படக்குழுவினருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். படத்தின் விளம்பர போஸ்டர்களில் மகாத்மா காந்தியின் படம் இடம் பெறுகிறது. அவர் படத்தை விட என் படத்தை அதிலும் பெரிய தலையுடன் இருக்கும் படத்தை போட்டிருக்கிறீகள். தயவு செய்து அதை எடுத்து விடுங்கள். மகாத்மா முன்னால் நான் ஒரு சிறுதுளி கூட கிடையாது. எனவே இனிமேல் இந்த போஸ்டரை வெளியிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

adhulya raviMishkinRamprakash RayappaSuseendransuttu pidikka uththaravuVikranth