“ஜல்லிக்கட்டு எப்படி மிருகவதை ஆகும்?” – வைரமுத்து கேள்வி..!

 

திருவள்ளுவர் தினத்தன்று கவிஞர் வைரமுத்து, பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துத் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடினார். அப்போது தமிழர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி பேசிய வைரமுத்து, ஜல்லிக்கட்டு தடைகளை உடையுங்கள் என மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

“தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்படுவதைத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு என்றால் ஏறுதழுவுதல் என அர்த்தம். ஏறு தழுவுதல் என்பது எப்படி வன்முறையாகும்? இதுவரைக்கும் ஏறுதழுவுதல் விளையாட்டில் மனிதர்கள் தான் காயப்பட்டிருக்கிறார்களே தவிர மாடுகள் காயப்படவில்லை. மிருகவதைத் தடைச்சட்டம் அதற்கு எப்படிப் பொருந்தும்?” என்றும் கேள்வி எழுப்பினார் வைரமுத்து.

ஏறு தழுவுதல்ஜல்லிக்கட்டுவைரமுத்து