வில்லன் நடிகர் தான் என்றாலும் அதெல்லாம் படத்தில் மட்டும் தான் என நிஜத்தில் தனது மனித நேயத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல குணசித்திர நடிகரும், மைம் கலைஞருமான மைம் கோபி.. சமீபத்தில் இவரது மைம் நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில் நடந்தது.
இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த நிதி, எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் நடிகர் கிஷோர் இயக்குனர்கள் சுசீந்திரன், கரு பழனியப்பன், மகிழ் திருமேனி, பாண்டிராஜ், பாலாஜி மோகன், சிவா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மைம் கோபியின் மனித நேயத்தை பாராட்டி அவரை ஊக்கப்படுத்தி வாழ்த்தினார்கள்..