மைம் கோபியின் மனிதநேயம்..!

கடந்த ஒருவருட காலமாக தமிழ்சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக ஜொலித்து வருபவர் நடிகர் மைம் கோபி.. ஆள் பார்க்க கடமுடா வில்லன் போல இருந்தாலும், சுபாவத்தில் ரொம்பவே மென்மையானவர் மைம்கொபி. அதுமட்டுமல்ல சமூக நோக்கிலான பல நல்ல விஷயங்களை செய்து வருவது பலரும் அறிந்திராத இவரது இன்னொரு பக்கம்.

நேற்று காலை சென்னை விமான நிலையத்திற்கு பதினைந்து சிறுவர் சிறுமியர்களை அழைத்துக்கொண்டு குழுவாக வந்தார் மைம் கோபி. குழந்தைகள் அனைவரும் தேவதை போலவும், சீமான்கள் போலவும் டிப்டாப்பாக ட்ரெஸ் அணிந்து குதுகலமாக காணப்பட்டனர்..

விசாரித்தால், மைம் கோபி தான் நடத்தி வரும் மைம் ஷோ மூலம் கிடைக்கும் பணத்தில் இப்படிப்பட்ட சில குழந்தைகளை தேர்ந்தெடுத்து விமானத்தில் அழைத்துச்சென்று, அவர்களை ஸ்டார் ஹோட்டல்களில் தங்கவைத்து அவர்கள் அதிகபட்சமான சந்தோஷத்தை அனுபவிக்க வைக்கவேண்டும் என்கிற பரந்த நோக்கில் தான் இந்த விமானப்பயணமாம்.

கோவைக்கு விமானத்தில் சென்று, மூன்று நாட்கள் ஸ்டார் ஹோட்டல்களில் தங்கி குழந்தைகளை மகிழ்விக்க நினைக்கும் மைம் கோபியின் மனித நேயத்தை நினைக்கும்போதே சிலிர்க்கிறது.

"Mime" Gopiமைம் கோபி