‘மெட்ரோ’வுக்காக செயின் திருடர்களை தேடிப்போன இயக்குனர்..!


தங்கம் தொடர்பான பெண்களுக்கு எதிரான குற்றங்களை மையமாக வைத்து ‘மெட்ரோ’ என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எழுதி இயக்குகிறார் ஆனந்த கிருஷ்ணன். இவர் ஏற்கெனவே ‘ஆள்’ படம் மூலம் ஊடகங்களின் பரவலான கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றவர். இந்தப்படத்திற்காக இவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளை பார்த்தால் இரண்டு பாகங்களாக புத்தகமே போடலாம் போல இருக்கிறது.

தினமும் விமான நிலையத்தில் தங்க நகைகள் கிலோ கணக்கில் பிடிபடுகிறது ஏன்?. இதன் பின்னுள்ள உலக அரசியல் என்ன? கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க இந்தியாவுக்கு தங்கம் அனுப்பும் நாடுகள் எவை..? இவை பற்றியெல்லாம் மேலும் கூடுதல் தகவல்கள் பெற செயின் பறிப்பில் பல முறை ஈடுபட்டு சிறை சென்று திருந்திய குற்றவாளிகளையும் சந்தித்து பேசியுள்ளார் இயக்குநர்..

கதையின் நாயகனாக புதுமுகம் சிரிஷ் நடித்துள்ளார் .நாயகியாக மாயா நடித்துள்ளார் இவர் ‘மான்கராத்தே’ படத்தில் தோழியாக நடித்தவர். ‘டார்லிங் 2′ படத்தின் நாயகியும் கூட. பாபிசிம்ஹா வில்லனாக மிரட்டியுள்ளார் .மேலும் செண்ட்ராயன் துளசி, யோகிபாபு, ‘ரேணிகுண்டா’ நிஷாந்த், சத்யா நடித்துள்ளனர். படப்பிடிப்பின் பெரும்பகுதி வடசென்னையில் நடைபெற்றுள்ளது.

சமீபத்தில் இந்த ‘மெட்ரோ’ படத்துக்காக சென்னை அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் ஒரு செயின் பறிப்பு சம்பவத்தை படமாக்கிக் கொண்டிருந்தது படக்குழு. பட்டப்பகலில் ஜனசந்தடி மிக்க இடத்தில் இப்படி ஒருசெயின் பறிப்பு சம்பவமா என சுற்றிலும் இருந்தவர்கள் அடிப்பதற்காக துரத்த, இது படப்பிடிப்பு என்று சொல்லி சமாளித்து, விட்டால் போதும் என அஹில் நடித்தவர்களை மீட்பதற்குள் பெரும்பாடாகி விட்டதாம்.

செயின்பறிப்பு, தங்கம் சம்பந்தமான திருட்டுகளின் பின்னுள்ள நெட்ஒர்க், எது? இதில் ஈடுபடும் இன்றைய இளைஞர்களின் மனப்பான்மை சமூக நடத்தை எப்படி உள்ளது என எல்லாவற்றையும் அலசுகிறதாம் இந்தப்படம். பிப்-26ல் இந்தப்படத்தை வெளியிடும் மும்முரத்தில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Bapi SimhaMayaMetroNishanthSathyaSendrayanSirishThulasiYogi BAbu