ஆரஞ்சு மிட்டாய் படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகவும் மாறிய விஜய்சேதுபதி அடுத்ததாக தற்போது மேகு தொடர்ச்சி மலை’ என்கிற படத்தை தயாரித்துள்ளார். படத்தின் இயக்குனர் லெனின் பாராதி மற்றும் இதில் நடித்துள்ள ஆண்டனி இருவருமே புதுமுகங்கள் தான். ஆனால் இவர்கள் இருவரையும் வைத்து இந்தப்படத்தை விஜய்சேதுபதி தயாரிக்க மிக முக்கியமான காரணம் இவர்களுக்கிடையே கடந்த எட்டு வருடமாக நிலவிவரும் நட்பு தான்.
வெண்ணிலா கபடி குழு படத்தில் பத்தோடு பதினொன்றாக கொஞ்ச நேரமே வந்து போகும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல விஜய்சேதுபதியும் இடம்பெற்று இருந்தார்.. அப்போது கேஸ்டிங் மேனேஜராக இருந்தவர் தான் லெனின் பாரதி. அந்தப்படத்தில் இன்னொரு வந்துபோகும் கதாபாத்திரமாக நடித்தவர் தான் ஆண்டனி. அப்போது இந்த மூவருக்குளும் நட்பு ஏற்பட்டது.. 2013ல் விஜய்சேதுபதியிடம் இந்த கதையை சொன்னாராம் லெனின் பாரதி..
அப்போது தான் விஜய்சேதுபதி வளர ஆரம்பித்த சமயம்.. நான் நல்ல இடத்திற்கு வந்தால் இந்தப்படத்தை நானே தயாரிக்கிறேன் என வாக்கு கொடுத்துள்ளார் விஜய்சேதுபதி. சொன்னபடியே இதோ இப்பொது இந்த படத்தை தயாரித்து நட்புக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார் விஜய்சேதுபதி.
இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இளையராஜாவும் இயக்குனர் லெனின்பாரதியின் அப்பாவும் சிறுவயது பள்ளி தோழர்கள்.. அந்த நட்பின் காரணமாகவும் லெனின் சொன்ன கதையில் இளையராஜாவுக்கு ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாகவும் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.. விஜய்சேதுபதி இந்தப்படத்தை தயாரிக்க ஆரம்பிக்கும் முன்னரே இளையராஜாவிடம் பேசி சம்மதம் வாங்கி வைத்திருந்தாராம் லெனின் பாரதி.