கார்த்திக் சுப்புராஜ் டைரக்சனில் பிரபுதேவா நடிக்கும் ‘மெர்க்குரி’..!

ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் கடந்த 2014ல் தொடங்கி, பெஞ்ச் பிலிக்ஸ், பெஞ்ச் காஸ்ட், பெஞ்ச் சப்ஸ் என்கின்ற மூன்று பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. இதுவரை 150 படத்திற்கும் மேலாக சப்டிட்லிங் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதன்முதலில் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக 2015ல் பெஞ்ச் டாக்கீஸ் என்கின்ற பெயரில் 5 குறும்படதிணையும் 2016 ல் அவியல் என்கின்ற படத்தின் மூலம் 4 குறும்படத்தினையும் ஒன்றிணைத்து ஒரு மிகப்பெரிய சாதனை படைத்து, குறும்பட இயக்குனர்களுக்கு ஊக்கம் மற்றும் பாதை வழிவகுத்து கொடுத்தது.

தற்பொழுது தனது ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பிலேயே வெள்ளித்திரையிலும், டிஜிட்டல் உலகிலும் கால்பதித்து இரண்டு திரைப்படத்தினையும், வெப் சீரீஸ் ஒன்றினையும் தயரித்துள்ளனர். முதலாவதாக ‘மேயாத மான்’ எனும் படத்தினையும் பின்பு “மெர்குரி” எனும் திரைபடத்தையும், கள்ளசிரிப்பு எனும் வெப் சீரீஸ்சும் தயாரித்து வெளியிட திட்டமிட்டுள்ளது

அதில் பிரபுதேவா நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே இயக்கி வருகிறார் என்பது நமக்கு தெரியும்.. அந்தப்படத்திற்கு இப்போது மெர்க்குரி என டைட்டில் வைத்துள்ளார்கள். இதில் பிரபுதேவா முதன்முறையாக நெகடிவ் ரோலில் நடித்திருக்கிறார்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெறுகிறது.

‘மெர்க்குரி’KarthickSubburajMercuryPrabhudevaகார்த்திக் சுப்புராஜ்