இன்று அடிக்கடி செய்தித்தாள்களில் படிக்கும் பல செய்திகளில் பலரையும் அதிர்ச்சியும் அதேசமயம் ஆச்சரியமும் அடையவைக்கும் செய்தி என்றால், அது தான் காதலித்த பெண்ணையே தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கயவர்களை பற்றிய செய்திதான். காதல் என்கிற போர்வையில் அப்பாவி பெண்களை நம்பவைத்து அவர்களது கற்பை தான் சூறையாடுவது மட்டுமின்றி, தனது நண்பர்களுக்கும் விருந்தாக்குகிறான் என்றால் அவன் எப்படிப்பட்டம் கொடூரனாக இருப்பான்.?
இப்படிப்பட்ட கதையம்சத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘மியாவ்’. ஒரு அப்பாவி பெண்ணை ஒரு இளைஞன் காதலிப்பதாக ஏமாற்றி நண்பர்களுக்கும் விருந்தாக்கி விடுகிறான். அந்தப்பெண் இறந்து, அதனுடைய ஆத்மா ஒரு பூனைக்குள் புகுந்து கயவர்களை பழிவாங்குவதுதான் ‘மியாவ்’ படத்தின் கதை.
இந்தியாவிலேயே முழுக்க முழுக்க ஒரு பூனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் ஒரு பெர்சியன் பூனை நடித்துள்ளது சின்னாஸ் பழனிசாமி இயக்கியுள்ள இந்தப்படத்தின் ஆடியோ வெளியீடு தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு முன்னிலையில் நேற்று நடைபெற்றது. லவ் பண்ற பொண்ணுங்க யாரையும் சீக்கிரமே நம்பி ஏமாற வேண்டாம் என்கிற விழிப்புணர்வை கொடுக்கும் விதமாக இந்தப்படம் உருவாகியுள்ளதாம்.